Friday, October 19, 2007

கற்றது தமிழ், சராசரி தமிழ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட ஒன்று தான். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, வெட்ட வேண்டிய சில காட்சிகளை நீக்கியிருந்தால்

சராசரி ரசிகனின் கவனத்தையும் ஈர்த்திருக்கும், பருத்தி வீரனைப் போல். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஜீவாவின் உழைப்பு, யுவனின் இசை, முத்துக்குமாரின் நெஞ்சை உருக்கும் வரிகள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், தமிழ் படித்தால் சைக்கோ ஆகி விடுவோம் என்று பார்வையாளர் அஞ்சும் விதத்தில் சில காட்சிகள் இருப்பது தேவை தானா. இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தில், முழு முத்திரையை பதிப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

No comments: