Friday, October 10, 2008

வட்டமிடுகின்றன வல்லூறுகள்
கிளிநொச்சி என்ன எலிக்குஞ்சா
கவ்விக் கொள்ள?
அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி
ஆண்டிப்பட்டியில் விலை ஏற்றம்
உலகமயமாக்கலில் இந்தியா

Wednesday, October 8, 2008

மாறிய சாந்தம்
புத்தரின் முகம் சிவப்பானது
இனப்படுகொலையாகும் தமிழரின் ரத்தம் தெறித்து
மாற்றம்:

மனமாற்றம் இன்றி மதமாற்றம்
சாத்தியமாக்கியது சூலாயுதம்

Thursday, October 2, 2008

அகலமாகிக் கொண்டே போனது
கரைகள் தொட்டுக் கொள்ளும் வரை
ஏரி வரப்பு